நடிகர் சங்கம் கட்டடம் கோட்டையாக மாறும் - கமல்
31 மார்,2017 - 12:00 IST
தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை, ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் முதல் கல்லை எடுத்து வைப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் கமல், லண்டன் சென்று திரும்பியதால் சற்று தாமதமாக காலை 11.30 மணியளவில் பங்கேற்றார். அவருக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து கட்டடத்திற்கான கல்லை கமல் எடுத்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ‛‛பல நாள் கனவு இது. இன்று அனைவரும் ஒன்று கூடி இந்த விழாவை நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த செங்கலில் நானும் ஒரு சிமெண்ட்டாக இருந்துள்ளேன் என்று எண்ணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் சங்க கட்டடம் நிச்சயம் பெரிய கோட்டையாக மாறும்'' என்றார்.
0 comments:
Post a Comment