லைகா நிறுவனம் நடத்தவிருந்த இலங்கை தமிழர்களுக்கு 150 வீடுகள் வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளவிருந்தார்.
ஆனால் தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்பால் ரஜினி, அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து இலங்கைக்கு இம்முறை செல்லவில்லை என தெரிவித்தார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட லைகா அந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்தது.
மேலும், ராஜபக்சேவின் மகன் நாமல், ரஜினி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தமிழக அரசியல்வாதிகள் அவரை வரவிடாமல் சூழ்ச்சி செய்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள லைகா நிறுவனத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது ரஜினி இலங்கை பயணம் ரத்து தொடர்பாக போடப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
Is Rajini is reason for Police protection to Chennai Lyca office
0 comments:
Post a Comment