ஜி.வி.பிரகாசுக்கு பாசிட்டீவ் எனர்ஜி கொடுத்த செம!
27 மார்,2017 - 08:54 IST
டைரக்டர் பாண்டிராஜின் பசங்க புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள படம் செம. வள்ளிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். அந்த வகையில், மார்ச் 11-ந்தேதி நடிகர் கார்த்தி வெளியிட்ட செம பட போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அந்த போஸ்டரில் பாசிட்டீவ் எனர்ஜி இருப்பதாகவும் பலரும் கருத்து சொன்னார்கள்.
அதுபற்றி ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, செம படத்தின் கதையே செம காமெடி. இதுவரை நான் சில காமெடி படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தின் காமெடி ட்ராக் ரொம்ப புதுசு. அந்த காமெடி ட்ராக்கில் கோவை சரளாவின் கேரக் டர்தான் பிரதானமாக உள்ளது. அந்தவகையில், காமெடி காட்சிகள் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கக்கூடியதாக இடம்பெற்றுள்ளது. முக்கியமாக, படத்தின் கதை பாசிட்டீவ் எனர்ஜியை கொடுக்கக்கூடியது. அதுதான் போஸ்டரிலும் வெளிப்பட்டுள்ளது என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
0 comments:
Post a Comment