ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தை பிரபல லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கை தமிழர்களுக்கு 150 வீடுகளை வழங்க திட்டமிட்டு, அதில் கலந்து கொள்ள ரஜினியை அழைத்தனர்.
ஆனால் தமிழக அரசியல்வாதிகள் ரஜினியை தடுக்க, இலங்கை பயணத்தை ரத்து செய்தார் ரஜினி.
எனவே, ரஜினியின் இலங்கை பயணத்தை தடுத்த, திருமாவளவன், வேல்முருகன் ஆகியோருக்கு எதிராக இலங்கையின் யாழ்பாணம், முல்லை தீவு உள்ளிட்ட இடங்களில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகிந்த ராஜ்பக்சேவுடன் கை குலுக்கிய திருமாவளவனுக்கு ரஜினியை தடுக்க என்ன தகுதி இருக்கிறது ? தலைவா வா… என்பது போன்ற வாசகங்களை வைத்து போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் தனக்கு ஆதவாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.
நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும், நேரம் கூடிவரும் போது சந்திப்போம்.
நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கண்டித்து இலங்கையில் தமிழர்கள் போராட்டம் நடத்தியிருப்பது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது.
Rajini said Thanks to Srilanka peoples who warned Tamil political leaders
0 comments:
Post a Comment