ஷாருக்கான், ஜூகி சாவ்லாவுக்கு அமலாக்க துறை நோட்டீஸ்
25 மார்,2017 - 10:31 IST
கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியால் சுமார் 73 கோடி ரூபாய் இந்திய அரசுக்கு அன்னிய செலவாணி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த அமலாக்கத்துறை கோல்கட்டா அணியின் உரிமையாளர்கள் ஷாருக்கான், அவரது மனைவி கவுரி, பங்குதாரார் நடிகை ஜூகி சாவ்லா ஆகியோர் மீது அன்னிய செலவாணி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் புதிய திருப்பமாக நைட்ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நைட்ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2 கோடி பங்குகளை வெளியிட்டது. தனது பங்குகளில் 50 லட்சத்தை மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த தி சீ ஐலண்ட் நிறுவனத்துக்கு விற்றது. 40 லட்சம் பங்குகளை நடிகை ஜூகி சாவ்லாவிற்கு விற்றது. ஒரு பங்கின் மதிப்பு 99 ரூபாயாக இருந்த நிலையில் வெறும் 10 ரூபாய்க்கு பங்குகள் விற்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 73 கோடியே 63 லட்சம் ரூபாய் அன்னிய செலாவணி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை மூவரும் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment