முதல் படத்திலேயே பாடகியான நடிகை
30 மார்,2017 - 11:34 IST
பொதுவாக தமிழுக்கு அறிமுகமாகும் மலையாள நடிககைள் ஒரு சில படங்களில் நடித்த பிறகு தாங்கள் நடிக்கும் படங்களில் பாடுவார்கள். ஆனால் அபர்ணா பாலமுரளி என்ற நடிகை அறிமுகமாகும் முதல் படத்திலேயே பாடகியாகியிருக்கிறார்.
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த மஹேஷிண்ட பிரகாரம் படத்தில் அறிமுமான அபர்ணா பாலமுரளி 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்தப் படத்தை மிஷ்கின் உதவியாளர் ஸ்ரீகணேஷ் இயக்கி உள்ளார். வருகிற 7-ம் தேதி படம் வெளிவருகிறது. படத்தில் நடித்திருப்பது பற்றியும், பாடியிருப்பது பற்றியும் அபர்ணா பாலமுரளி கூறியதாவது:
முழுக்க முழுக்க இளமையான திறமையாளர்களை கொண்டு உருவான இந்த 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் நான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. மீரா வாசுதேவன் என்கிற ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றேன். இந்தப் படத்தின் மூலம் நான் பாடகியாகவும் அறிமுகமாகிறேன். படத்தின் இசை அமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் மன்னிப்பாயா... என்ற பாடலை பாடி இருக்கிறேன். ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருவது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்கிறார் அபர்ணா பாலமுரளி.
0 comments:
Post a Comment