Friday, March 31, 2017

டோரா விமர்சனம்






டோரா விமர்சனம்

நடிகர்கள் : நயன்தாரா, தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன், சுலிகுமார் மற்றும் பலர்.
இயக்கம் : தாஸ் ராமசாமி
இசை : விவேக் சிவா மெர்வின்
ஒளிப்பதிவாளர் : தினேஷ் கிருஷ்ணன்
எடிட்டர்: கோபி கிருஷ்ணா
பி.ஆர்.ஓ.: நிகில்
தயாரிப்பு : சற்குணம்


Dora movie working stills


கதைக்களம்…


நயன்தாராவின் அப்பா தம்பி ராமையா.


இவர்கள் இருவரும் ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தை ஆரம்பிக்க செகண்ட் ஹேண்டில் ஒரு பழைய காரை வாங்குகின்றனர்.


ஆனால் அந்த கார், ஒருமுறை தானே இயங்கி ஒருவனை கொல்கிறது.


இதற்கான விசாரணையில் இறங்குகிறார் ஹரிஷ் உத்தமன்.


ஆனால் சரியான ஆதாரம் இல்லாமல் இவர் குழம்பி நிற்கிறார்.


அந்த கார் இன்னும் சிலரை கொல்ல நினைக்கிறது. அதற்கு என்ன காரணம்? அப்படியென்றால் அந்த காருக்குள் இருக்கும் ஆன்மா யார்?


அது நயன்தாராவின் காரில் வரக் என்ன காரணம்? என்ன தொடர்பு? என்ற பல திருப்பங்களுக்கு பதில் சொல்கிறாள் டோரா.
dora stills


கதாபாத்திரங்கள்…


கதை தான் ஹீரோ. நான்தான் ஹீரோயின் என அபார நம்பிக்கையில் இறங்கி அடிக்கிறார் நயன்தாரா.


அப்பா தம்பி ராமையாவிடம் கொஞ்சுவதும், பேய் காரைப் பார்த்து பயப்படுவதும், பின்னர் வில்லனைக் கொல்வதும் என பல கோணங்களில் அசத்துகிறார் நயன்தாரா.


தம்பி ராமையாவும் தன் பங்கில் குறைவைக்கவில்லை. ஹரிஷ் உத்தமன் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.


தென்னிந்தியாவில் வடநாட்டு பையன்கள் வந்து, காட்டும் கைவரிசைகளை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.


dora nayan thambi ramaiaya


படம் பற்றிய அலசல்…


கதை ஹீரோ என்பதால், நாய், பேய், கார் என அனைத்தையும் நயன்தாராவுக்கு போட்டியாக களம் இறக்கிவிட்டுள்ளார் டைரக்டர்.


காரிடம் நயன்தாரா பேசும் காட்சிகள், போலீஸிடம் இருந்து கார் தப்பிக்கும் காட்சிகள் நிச்சயம் குழந்தைகளை கவரும்.


காரின் நிழலாக வரும் நாய் மற்றும் அந்த கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பு சேர்க்கிறது.


ப்ளாஷ்பேக் காட்சியில் காருக்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம்? என்ற காட்சிகளும், பாலியல் கொடுமை காட்சிகளும் படத்திற்கு அழுத்தம் சேர்க்கின்றன.


டோராவை மையப்படுத்தி ஒரு பாடல். நான் ஈ படத்தில் உள்ள பாடலை நினைவுப்படுத்துகிறது.


பின்னணி இசை த்ரில் சீன்களில் திகைக்க வைக்கிறது.


தாஸ் ராமசாமி படத்தை கையாண்ட விதம் அருமை என்றாலும் பழிவாங்கும் கதையில் இன்னும் ட்விஸ்ட் சேர்த்திருந்தால், டாப் கியரில் படம் எகிறியிருக்கும்.


டோரா… குழந்தைகளுடன் ரசிக்கலாம்





  • Tags:

  • Dora Kids, Dora movie, Dora movie review rating, Dora Nayanthara, டோரா கதை, டோரா குட்டீஸ் எப்படி?, டோரா டிவி படம், டோரா திரைப்பார்வை, டோரா நயன்தாரா, டோரா விமர்சனம், டோரா ஹரிஸ் உத்தமன்

0 comments:

Post a Comment