Monday, March 27, 2017

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யுங்கள்: இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை


விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யுங்கள்: இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை



27 மார்,2017 - 10:12 IST






எழுத்தின் அளவு:








பயிர்கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு தண்ணீர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 13 நாட்களாக தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் விக்ரமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எங்கள் தமிழக விவசாயிகள் தற்போது தலைநகர் டில்லியில் அவர்களது வாழ்வுரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புதிய பயிர்கடன் வாங்கினால் அதனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது அந்த கடன்களை தள்ளுபடி செய்வதற்கு தகுந்த வழி வகைகள் செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போது அடைக்க முடியாமல் நிலுவையில் இருக்கும் அவர்களது பழைய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வழியில்லை என்று அறிவித்திருப்பது அவர்களது எதிர்காலத்தை இருட்டில் தள்ளிவிடுவது போன்ற சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

மனித இனத்திற்கு அத்யாவசியமான உணவுப்பொருட்களை பயிர் செய்யும் விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டு கடன்காரர்களாகி கடனை அடைக்க முடியாமல் அவமானத்தினால் தற்கொலை செய்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காக அரசாங்கம் மக்களால்தான் அரசாங்கம் என்ற கருத்தின் அடிப்படையில் மத்திய அரசு கருணை உள்ளத்தோடு தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்து அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment