Wednesday, March 29, 2017

20 வருடம் கழித்து இணைந்த 'இருவர்'..!


20 வருடம் கழித்து இணைந்த 'இருவர்'..!



29 மார்,2017 - 13:00 IST






எழுத்தின் அளவு:








நடிகர் பிரகாஷ்ராஜை பொறுத்தவரை மலையாள படங்களில் நடிக்க கூடாது என கங்கணம் கட்டிக்கொள்ளவெல்லாம் இல்லை.. நல்ல வாய்ப்பு தேடிவந்தால் நடிக்க தயாராகத்தான் இருக்கிறார்.. ஆனால் 2010ல் பிருத்விராஜுடன் நடித்த 'அன்வர்' படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இடைவெளி விட்டுவிட்டது அவரது டைட் ஷெட்யூல் காரணமாகத்தான். இப்போது மீண்டும் ஜெயராமுடன் இணைந்து 'அச்சாயன்ஸ்' என்கிற மலையாள படத்தில் நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ்..

இருந்தாலும் மலையாள ரசிகர்களை பொறுத்தவரை, எல்லா மொழி முன்னணி ஹீரோக்களுடனும் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் தங்களது சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் மலையாளத்தில் நேரடியாக ஒரு படத்தில் நடிக்க மாட்டாரா என்கிற ஆர்வம் இருக்கவே செய்கிறது.. இத்தனைக்கும் 20 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் 'இருவர்' படத்தில் மோகன்லால் தமிழில் அறிமுகமானபோது அவருடன் முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார் தான்..

ஆனால் என்ன இருந்தாலும் மலையாளத்தில் இருவரும் இணைந்து நடித்தால் அது ஸ்பெஷல் இல்லையா..? அந்தவகையில் மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் 'ஒடியோன்' என்கிற படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் பிரகாஷ்ராஜ். விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த ஸ்ரீகுமார் என்பவர் இயக்கும் இந்தப்படத்தை மோகன்லாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் தான் தயாரிக்கிறது.


0 comments:

Post a Comment