குத்து பாட்டுக்கு ஆட ரூ.65 லட்சம் சம்பளம்
26 மார்,2017 - 10:25 IST
மெட்ராஸ் பட நாயகி, குத்து பாட்டுக்கு ஆட, 65 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். நடிகர் கார்த்தியுடன், மெட்ராஸ் படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. இவர் நடித்த, கடம்பன் படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. கைவசம், இரண்டு தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் உள்ளன.
இந்நிலையில், தெலுங்கு பட தயாரிப்பாளரின் மகன் சீனிவாஸ் நாயகனாக நடிக்கும் படத்தில், குத்து பாட்டுக்கு நடனம் ஆட, கேத்ரின் தெரசா, 65 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இது, தமிழ் மற்றும் தெலுங்கு பட உலக நடிகையருக்கு கடுப்பை கிளப்பி உள்ளது. இளம் நாயகியரிடையே போட்டி அதிகரித்து உள்ளதால், காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள தெரிந்த நடிகை என்ற பெயரையும், கேத்ரின் தெரசா பெற்றுள்ளார்.
0 comments:
Post a Comment