Friday, March 31, 2017

90 சதவிகிதம் செட்டுக்குள் படமாக்கப்பட்ட பாகுபலி-2


90 சதவிகிதம் செட்டுக்குள் படமாக்கப்பட்ட பாகுபலி-2



31 மார்,2017 - 17:42 IST






எழுத்தின் அளவு:








எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி-2' ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ரிலீசாகிறது. இதுநாள்வரை படத்தைப் பற்றி வாய் திறக்காத டெக்னீஷியன்கள், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் 'பாகுபலி-2' குறித்து தகவல்களை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கும் சாபு சிரில் சொன்ன தகவல்கள் மூலம் பாகுபலி-2 பற்றிய சில விஷயங்கள் வெளியே தெரிய வந்துள்ளன.

''பாகுபலி' முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் உண்டு. இரண்டாம் பாகம் படு த்ரில்லிங்காகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். அதே நேரம் விஷுவல் 'ட்ரீட்'டாகவும் இருக்கும். முதல் பாகத்தில் அதிகமாக கிராஃபிக்ஸ் வேலைகள் இடம் பெற்றிருந்தது. இரண்டாம் பாகத்தில் கிராபிக்ஸ் குறைவு. மிகப் பிரம்மாண்டமான செட்களுக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

'பாகுபலி-2' வின் கிளைமேக்ஸை ஆந்திராவிலுள்ள மிகப் பெரிய ஒரு கல் குவாரியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கிளைமேக்ஸை முதலில் சம்பல் ஏரியாவில் படம் பிடிக்க திட்டமிட்டிருந்தோம். அப்போது அங்கிருந்த சூழ்நிலை படப்பிடிப்பு ஏற்ற மாதிரியாக அமையாததால் கல் குவாரியை தேர்வு செய்தோம். படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தான் நடந்திருக்கிறது!

காடு சம்பந்தப்பட்ட காட்சிகளை கேரளாவிலுள்ள கண்ணவம் காட்டுக்குள் படமாக்கியிருக்கிறோம். ஆந்திராவிலும் காட்டுப் பகுதிகள் இருக்கின்றன என்றாலும் கேரளாவிலுள்ள காடு மாதிரி அடர்த்தியாகவும், பெரிய மரங்கள் நிறைந்த காடு மாதிரியும் இருக்காது என்பதால் கேரளா காடுகளை தேர்வு செய்தோம்'' என்று 'பாகுபலி-2 படம் பற்றி வாய் திறந்திருக்கிறார் சாபு சிரில்!


0 comments:

Post a Comment