Tuesday, March 28, 2017

நடிகர் சூரியின் தந்தை காலமானார்


நடிகர் சூரியின் தந்தை காலமானார்



28 மார்,2017 - 08:48 IST






எழுத்தின் அளவு:








இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு. விஷ்ணு நாயகனாக நடித்த இந்த படத்தில் காமெடியனாக சூரி நடித்திருந்தார். அதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தபோதும். இந்த படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடி மூலம் கவனிக்கப்படும் காமெடி நடிகரானார் சூரி. தற்போது நிறைய படங்களில் நடித்து வரும் பிசியான காமெடி நடிகராக வலம் வருகிறார் சூரி.

இந்தநிலையில் நேற்று (27.03.17) இரவு நடிகர் சூரியின் தந்தை ஆர். முத்துசுவாமி காலமானார். அவருக்கு வயது 75. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜாகூரில் நேற்று உடல்நலக்குறைவால் இரவு 10.15மணி அளவில் காலமானார். நடிகர் சூரி தந்தையின் இறுதி ஊர்வலம் இன்று (28.03.17) மாலை 4மணி அளவில் நடைபெறயிருக்கிறது.


0 comments:

Post a Comment