கிடப்பில் போடப்பட்ட சஞ்சய் தத் படம்
26 அக்,2016 - 15:28 IST
சிறைவாசம் சென்றுவிட்டு மீண்டும் படங்களில் பிஸியாகி உள்ள சஞ்சய் தத், ‛மார்கோ பாவ்' என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் இந்தப்படம் தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா தயாரிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் கதை திருப்திகரமாக இல்லாததால் இந்தப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ‛மார்கோ பாவ்' படம் தந்தை - மகள் உறவை பற்றிய படமாக உருவாக இருந்தது. இதை வினோத்தின் சகோதரி ஷெல்லி சோப்ரா இயக்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment