தூம்-4ல் நான் இல்லை : பிரபாஸ்
26 அக்,2016 - 16:07 IST
பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமாகிவிட்ட நடிகர் பிரபாஸ். இவர் தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். சில மாதங்களுக்கு முன் பாலிவுட்டில் தூம் படத்தின் நான்காம் பாகத்தில் பிரபாஸ் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை பிரபாஸ் மறுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த மும்பை திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பிரபாஸ் தூம்-4 படம் பற்றிய கேள்விக்கு பதிலளித்தாவது... "தூம் -4 படத்தில் நான் நடிக்கவில்லை. மேலும் என்னிடம் இப்படம் பற்றி யாஷ் ராஜ் படக்குழுவும் பேசவில்லை. இந்த செய்திகள் அனைத்தும் வதந்தியாகும். ஆனால் எனக்கு பாலிவுட்டில் பட வாய்ப்பு வருவது உண்மைதான். தற்போது என்னால் இந்தி படங்களில் நடிக்க முடியாது, ஏனென்றால் நான் இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளேன். அந்த இருப்படங்களும் பாகுபலி-2 படம் முடிந்ததும் நடிப்பேன் " என்றார்.
பாகுபலி-2 படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment