Friday, October 28, 2016

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து மீடியா பணம் சம்பாதிக்கிறது – பிரபல நடிகை காட்டம்

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து மீடியா பணம் சம்பாதிக்கிறது – பிரபல நடிகை காட்டம்

Published 1 min ago by CF Team  Time last modified: October 28, 2016 at 12:24 pm [IST]

28-1477621169-disha-patani-2எனது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து மீடியா பணம் சம்பாதிக்கிறது என்று டோணி படத்தில் நடித்த திஷா பதானி தெரிவித்துள்ளார்.


advertisement

லோஃபர் தெலுங்கு படம் மூலம் நடிகையான திஷா பதானி எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். படத்தில் டோணியின் காதலி பிரியங்காவாக நடித்திருந்தார்.

திஷாவும் பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராபும் காதலித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. எல்லோரும் எனது சினிமா வாழ்க்கையை விட்டுவிட்டு தனிப்பட்ட வாழ்க்கை பற்றியே பேசுகிறார்கள். இது தான் மீடியாவுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது என்று பாய்ந்துள்ளார் திஷா.

என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசி மீடியா பணம் சம்பாதிக்கிறது. எனக்கும் சரி, மீடியாவுக்கும் சரி வேலை சம்பந்தப்பட்ட வாழ்க்கை உள்ளது. அதை பார்ப்போம் என்று திஷா தெரிவித்துள்ளார்.

அது எப்படி இந்த மீடியாவால் தினமும் ஒரு கிசுகிசு எழுத முடிகிறது? அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எழுதுகிறார்கள். நான் இங்கு வேலை செய்ய வந்துள்ளேன் என்கிறார் திஷா.

திஷா பதானியும், டைகரும் காதலிப்பதாக பேசப்பட்டாலும் சம்பந்தப்பட்ட இருவரும் அதை மறுத்து வருகிறார்கள். இந்நிலையில் தான் திஷா மீடியா மீது பாய்ந்துள்ளார்.

English summary : Actress Disha Patani said that “People (the media) are making money out of it (her personal life). I have a professional life and so does the media.”

0 comments:

Post a Comment