Sunday, October 30, 2016

விஜய்யை மாற்றிய கீர்த்தி… சிவகார்த்திகேயன் ட்ரெய்னிங்கா?

keerthy sureshவிஜய்யுடன் முதன்முறையாக பைரவா படத்தில் இணைந்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.


படத்தில் ஆக்ஷன், அனல் பறக்கும் பன்ச், செம டான்ஸ் என விஜய் அசத்தினாலும், அவர் சூட்டிங் ஸ்பாட்டில் மிக அமைதி என பலர் கூறக் கேட்டிருப்பதை அறிந்திருப்போம்.


ஆனால் பைரவா சூட்டிங்கில் அமைதியுடன் இருக்கும் விஜய்யிடம் அடிக்கடி கீர்த்தி ஏதாவது பேசிக் கொண்டே இருப்பாராம்.


இதன்பின்னர் விஜய்யும் நன்றாக கலகலப்புடன் பேச ஆரம்பித்துவிட்டாராம்.


இதைப் பார்த்த சிலர், அட இந்த பொண்ணு, விஜய்யே இப்படி மாத்திடுச்சே. செம ஆளுதான். ஒரு வேளை சிவகார்த்திகேயன் ட்ரெய்னிங்கா இருக்குமோ? என்று பேசி கொள்கிறார்களாம்.


சிவகார்த்திகேயன், தன் சூட்டிங் ஸ்பாட்டில் மிகுந்த ஜாலியாக இருப்பதும், அவருடன் கீர்த்தி சுரேஷ் இரு படங்களில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment