பிளாஷ்பேக்: டான்சராக இருந்து பல சாதனைகளை உருவாக்கிய கே.ஆர்.விஜயா
31 அக்,2016 - 14:20 IST
பழனிமலை அடிவாரத்தில் வசித்து வந்தது தெய்வநாயகி குடும்பம். பூர்வீகம் கேரள மாநிலம் திருச்சூர். அப்பா பழனி வரும் பக்தர்களுக்கு கைடாக வேலை செய்தார். அம்மா வீட்டு வேலை செய்தார். பழனியில் பொருட்காட்சி நடக்கும்போது அதில் டான்ஸ் ஆடுபவராக தெய்வநாயகி. அவரது நடனம் எல்லோருக்கும் பிடித்து விடவே வெளியூர் பொருட்காட்சிக்கும் ஆட அழைத்தார்கள்.
தெய்வநாயகியின் வருமானத்தை நம்பித்தான் அவரது குடும்பமே இருந்தது. தெய்வநாயகிக்கு 16 வயதாகும்போது விருதை ராமசாமி என்பவரது நாடக கம்பெனியில் நடிகையாக சேர்ந்தார். நாடகத்தில் தெய்வநாயகி நடிப்பை பார்த்த பி.ஏ.குமார் என்ற இயக்குனர் அவரை மகளே உன் சமர்த்து என்ற படத்தில் ஹீரோயின் தோழியாக நடிக்க வைத்தார்.
அந்தப் படத்தில் நடித்த எம்.ஆர்.ராதா "உன் பெயர் என்ன?" என்று கேட்டார் "தெய்வநாயகி" என்று கூறியிருக்கிறார். "ரொம்ப ஓல்டா இருக்கே விஜயா, கிஜயான்னு ஸ்டைலா பேரை வச்சுக்க அப்பதான் முன்னுக்கு வரமுடியும்" என்றிருக்கிறார். அதன் பிறகு தெய்வநாயகி, அப்பாவின் இன்ஷியலை சேர்த்து கே.ஆர்.விஜயா ஆனார். அதன் பிறகு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனால் கற்பகம் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு அவர் நடிப்பில் பல சாதனைகளை ஏற்படுத்தியதும், புன்னகை அரசியாக வலம் வந்ததும் சாதனை வரலாறு.
0 comments:
Post a Comment