
இந்நிலையில், இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை மோஷான் போஸ்டர் மூலமாக வெளியிடவுள்ளனர். அதன்படி, டீசர் ரிலீஸ் தேதியுடன் உருவாகும் மோஷன் போஸ்டரை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தீபாவளிக்கு சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்த மோஷன் போஸ்டர் நல்ல விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ பட வரிசையில் மூன்றாவது பாகமாக உருவாகிவரும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதிகா சரத்குமார், ராதாரவி, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
0 comments:
Post a Comment