நாளை முதல் விஜய் டி.வியில் சந்திர நந்தினி
30 அக்,2016 - 12:27 IST
ஏக்தா கபூர், ஷோபாக கபூர் தயாரிப்பில் உருவாகும் சந்திர நந்தினி தொடர் ஸ்டார் பிளசில் கடந்த மாதம் 10ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரின் தமிழ் பதிப்பு நாளை (31ந் தேதி) முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.
இது சந்திரகுப்த மவுரியருக்கும், நந்தினிக்கும் இடையிலான காதல் கதை. ரஞ்சன் குமார் என்பவர் இயக்குகிறார். ரஜட் டோகாஸ் சந்திரகுப்த மவுரியராக நடிக்கிறார். நந்தினியாக நடிகை ஸ்வேதா பாசு நடிக்கிறார். இவர்கள் தவிர தனுகான், ஜினீத் ரத், ஏஞ்சல் ரூப் சந்தினி, பப்பியா சென்குப்தா. மான்சி சர்மா உள்பட இந்தியில் பிரபலமான சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
பிரமாண்ட அரண்மணைகள், போர் காட்சிகள், கிளாமர் காட்சிகள், ரொமாண்டிங் காட்சிகள் என மிரட்டலாக இந்த சரித்திர தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இந்த தொடர் தமிழ் தவிர விரையில் தெலுங்கிலும் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த பிரமாண்ட பட்ஜெட் தொடரால் தற்போது கலைஞர் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தென்பாண்டி சிங்கம் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெறும் வசனத்தில் வண்டி ஓட்டினால் வேலைக்கு ஆகாது. சந்திர நந்தினிக்கு இணையான பிரமாண்டத்தை காட்டினால்தான் அந்த தொடர் நிலைக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.
0 comments:
Post a Comment