காஷ்மோரா கலெக்ஷ்ன்.... கார்த்தி ஹேப்பி
31 அக்,2016 - 17:14 IST
தீபாவளிக்கு வெளியான கொடி, காஷ்மோரா படங்களின் வசூல் பற்றி ஆளாளுக்கு ஆதாரமில்லாத தகவல்களை சகட்டு மேனிக்கு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப்பிலும் இப்போதெல்லாம் வசூல் தகவல்கள் வலம் வரஆரம்பித்துவிட்டன. அத்தனையும் அடிப்படையில்லாத தகவல்கள். தீபாவளி படங்களின் வசூல் நிலவரம் என்ன? என்று தெரிந்து கொள்வதற்காக காஷ்மோரா படத்தின் தயாரிப்பு தரப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது...
அதிகாரபூர்வமான வசூல் நிலவரத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்..... தமிழ்நாட்டில் ஏறக்குறைய 450 தியேட்டர்களில் வெளியான காஷ்மோரா படம் முதல் நாள் அன்று தமிழகத்தில் 5 கோடி வசூலித்திருப்பதாக சொல்கிறார்கள். ஆந்திராவில் காஷ்மோரா தெலுங்கு பதிப்பு 4 கோடியை வசூலித்திருக்கிறதாம். காஷ்மோரா படம் உலகஅளவில் ஒட்டுமொத்தமாக 12 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்கின்றனர்.
இரண்டாவது நாளில் அதாவது தீபாவளி அன்று.... தமிழகத்தில் 8 கோடியை வசூலித்த காஷ்மோரா ஆந்திராவில் 3.5 கோடி வசூலித்திருக்கிறது. அமெரிக்காவில் ஒன்றரை கோடி, யுனைடெட் அராப் எமிரேட்ஸ் 1 கோடி என உலக அளவில் 15 கோடியையும் வசூலித்திருக்கிறது. மூன்றாவது நாளிலும் 15 கோடியை வசூல் செய்திருப்பதாகவும், கார்த்தி நடித்த படத்திலேயே மிகப்பெரிய வெற்றிப்படம் என்ற பெயரை காஷ்மோரா படம் பெற்றிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். காஷ்மோரா படத்தின் வசூல் நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்ட கார்த்தி மிக மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.
0 comments:
Post a Comment