முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 35-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரிசியாங் அப்பல்லோ பிசியோதெரபி நிபுணர்களுடன் இணைந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கிறார்.
இது தவிர எய்ம்ஸ் நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்நானியும் சிகிச்சை அளித்து வருகிறார். தொடர்ந்து அளிக்கப்படும் தீவிர சிகிச்சை மூலம் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி விசாரிக்க முக்கிய தலைவர்கள், நடிகர், நடிகைகள் அப்பல்லோ ஆஸ்பத்திரி வந்து செல்கிறார்கள்.
இன்று டைரக்டர் பாரதி ராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ஷீலா, சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் சீனிவாசன் மற்றும் நடிகர், நடிகைகள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
முதல்-அமைச்சரின் உடல் நலம் பற்றி விசாரித்த கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் என்ற முறையிலும் நான் சார்ந்த கலை துறையின் மூத்த கலைவாணி என்ற முறையிலும், அவரது உடல் நிலைபற்றி விசாரிக்க வந்தேன். அவர் நலமாக இருப்பதாக நண்பர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
போராட்டங்களால் சூழப்பட்ட வாழ்க்கைக்கு சொந்தக்காரர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா. அவர் மருத்துவ பலத்தாலும் மனோபலத்தாலும் மீண்டு வருவார். முதல்வர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment