விஜய்யை பேச வைத்த கீர்த்தி சுரேஷ்!
30 அக்,2016 - 09:25 IST
சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்தபோது ஆரம்பத்தில் ஸ்பாட்டில் அமைதியாக காணப்பட்ட கீர்த்தி சுரேஷ், பின்னர் சிவகார்த்திகேயன், சூரியுடன் இணைந்து மதிய இடைவேளை நேரங்களில் செம ஜாலி அரட்டையில் ஈடுபட்டார். முக்கியமாக அவருக்கு தமிழ் நன்றாக பேச தெரியும் என்பதால், மொழிப்பிரச்சினையுள்ள நடிகைகளை விட்டு விலகியே நிற்கும் சூரி, கீர்த்திசுரேசுடன் நிறையவே அரட்டையடித்தார். அப்படி ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் இப்போது இன்னும் அரட்டையில் ஜாஸ்தியாகி விட்டார்.
முக்கியமாக, தான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களில் தனக்கான காட்சி இல்லையென்றால் கேரவனுக்குள் செல்லும் விஜய், சில சமயங்களில் ஸ்பாட்டிலும் அமர்ந்திருப்பார். ஆனால் தனது அருகில் நடிகைகள் இருந்தால் பெரிதாக பேச்சுக்கொடுக்கமாட்டார். தான் நடிக்க வேண்டிய அடுத்த காட்சி குறித்து அசை போட்டபடியே இருப்பார். ஆனால் அப்படிப்பட்ட விஜய்யையே பைரவா படப்பிடிப்பில் அதிகமாக பேச வைத்து விட்டார் கீர்த்தி சுரேஷ். அவர் அருகில் சென்று தானும் சேர் போட்டு அமர்ந்து, பேச்சுக்கொடுக்க, விஜய்யும் பதிலுக்கு பேச, முதன்முறையாக ஸ்பாட்டில் விஜய்யை ஜாலி அரட்டை அடிக்க வைத் துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதை பைரவா படக்குழுவினர் பெருமையாக பேசுகின்றனர்.
Advertisement
0 comments:
Post a Comment