
இப்படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். படத்திற்கு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் சந்தானம் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதோடு படத்தின் பூஜையும் இன்று சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தின் நாயகி அம்ரியா தஸ்தூர் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
0 comments:
Post a Comment