விஜய்தான் எனது ரோல்மாடல்! - மலையாள நடிகர் முகில்
29 அக்,2016 - 14:47 IST
மலையாளத்தில் ஒன் பை டூ என்ற படத்தில் நடித்தவர் முகில். பின்னர், நீ என்பது என்ற தமிழ் படத்தில் நாயகனாக நடித்தார். அப்படம் கடந்த வாரம் வெளியானது. அதையடுத்து பாலக்காட்டு மாதவன் படத்தை இயக்கிய சந்திர மோகன் இயக்கும் கொஞ்சம் நடிங்க பாஸ் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் முகில். இவருக்கு தனது தாய்மொழி மலையாளத்தை விட தமிழ்ப்படங்களில் நடிப்பதில்தான் ஆர்வம் அதிகமாக உள்ளதாம்.
அதுபற்றி முகில் கூறுகையில், தமிழில் நீ என்பது படத்தை அடுத்து கொஞ்சம் நடிங்க பாஸ் என்ற படத்தில் நடிக்கிறேன். அடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. நான் நடித்த நீ என்பது படத்தை பார்த்தவர்கள் என் நடிப்பை பாசிட்டீவாகவே சொல்லியிருக்கிறார்கள். அதேசமயம், முதல் படத்தில் தவறுகள் இருக்கும். ஆனால் அடுத்த படத்தில் அந்த தவறுகள் இல்லாமல் நடிப்பேன். முக்கியமாக ஆக்சன், காமெடி, செண்டிமென்ட் கதைகளாக செலக்ட் பண்ணி நடிப்பேன்.
மேலும் நான் மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்திருப்பதைப்பார்த்து, சமீபகாலமாக மலையாள படங்களின் கதைகளே பிரமிப்பாக உள்ள நிலையில், அங்கிருந்து தமிழுக்கு வந்து நடிப்பதேன்? என்று என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், எனக்கு ரஜினி, விஜய் படங்கள்தான் அதிகம் பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே அவர்கள் படங்களைத்தான் விரும்பி பார்ப்பேன். விஜய்தான் எனது ரோல் மாடல். அவரது டான்ஸ் பிடிக்கும். அவரை மாதிரி ஆட வேண்டும் என்று முயற்சிக்கிறேன்.
அடுத்து தமிழில் நான் நடிக்கும் கொஞ்சம் நடிங்க பாஸ் ஹாரர் படம் என்றபோதும், டான்ஸ் மூவ்மெண்டுகள் அதிகமாக உள்ள படம். அதனால் அந்த படத்தில் சிறப்பாக நடித்து, நடனமாடி எனக்கென ஒரு இடத்தை பிடித்து விடுவேன் என்று கூறும் முகில், ஹீரோவாக மட்டுமில்லாமல் பர்பாமென்ஸ் ஒரியண்டாக இருந்தால் வில்லனாக கூட நடிப்பேன் என்கிறார்.
0 comments:
Post a Comment