பிளாஷ்பேக் ; சஜின் என்பவர் மம்முட்டியான கதை தெரியுமா..?
27 அக்,2016 - 16:15 IST
1981களில் மெகாஸ்டார் மம்முட்டி தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள சினிமாவில் போராடிக்கொண்டு இருந்த காலகட்டம். சின்னசின்ன ரோல்கள் கிடைத்தாலும் தயக்கம் இல்லாமல் நடித்தார்.. அவரது சொந்த பெயர் முகமது குட்டி இஸ்மாயில் என்பதை சினிமாவுக்காக எப்படி மாற்றலாம் என யோசிக்கவெல்லாம் இல்லை.. முதலில் நடித்த படங்களில் சாதாரண கேரக்டர்கள் என்பதால் அதே பெயர் ஏதோ ஒரு மூலையில் இடம் பெற்றது.. தனது முகம் மக்கள் மனதில் பதிந்தால் அடுத்தடுத்த படிகளில் ஏறிவிடலாம் என மம்முட்டி நினைத்திருந்த நேரத்தில் தான் அவருக்கு 'ஸ்போடனம்' என்கிற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது..
அந்தப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர் சுகுமாரன்... ஆம். பிருத்விராஜின் தந்தை சுகுமாரனே தான்.. இருந்தாலும் அவருடன் படம் முழுவதும் ரோலில் மம்முட்டி நடித்திருந்தார்.. அந்தப்படத்தின் இயக்குனருக்கு, மம்முட்டியின் ஒரிஜினல் பெயர் வெகு நீளமாக இருந்ததால் அதை பயன்படுத்த விரும்பவில்லை.. அதனால் அவராகவே மம்முட்டிக்கு சஜின் என பெயர் சூட்டி டைட்டில் கார்டிலும் வால் போஸ்டர்களிலும் அதையே இடம்பெற செய்துவிட்டார். மம்முட்டிக்கும் அந்தப்பெயர் வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ தீர்மானிக்க முடியாத காலம் அது. அந்தப்படம் அதனால் அந்தப்பெயரே இருக்கட்டும் என விட்டுவிட்டார்.. அதன்பின் வந்த படங்களில் தான் மம்முட்டி என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
0 comments:
Post a Comment