Wednesday, October 26, 2016

எந்த பிரச்னையையும் என் விரலால் சமாளிப்பேன் - அஜய்


எந்த பிரச்னையையும் என் விரலால் சமாளிப்பேன் - அஜய்



26 அக்,2016 - 15:02 IST






எழுத்தின் அளவு:








நடிகர் அஜய் தேவ்கன் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் ‛சிவாய்'. இப்படம் அக்., 28-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது. இதனால் படத்தின் இறுதிக்கட்ட ரிலீஸ் மற்றும் புரொமோஷன் வேலைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டு இருக்கிறார் அஜய். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜய் இடத்தில், பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் மோதும் சூழல் வந்தால் எப்படி சமாளிப்பீர்கள் என்று கேட்டபோது, தான் எந்த ஒரு பிரச்னையையும் தன் ஒற்றை விரலால் சமாளித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.


இதுகுறித்து அஜய் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛எனக்கு சினிமா துறையில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பார்கள். எனக்கு எதுவும் பிரச்னை என்றால் அவர்களின் உதவியை கேட்பேன், இல்லையென்றால் எப்படிப்பட்ட பிரச்னை என்றாலும், அது யாராக இருந்தாலும் என்னுடைய சிறிய விரல் கொண்டே சமாளித்து விடுவேன் என்று கூறியள்ளார்.

‛சிவாய்' படம், கரண் ஜோகரின் ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்துடன் மோத உள்ளது.


0 comments:

Post a Comment