Saturday, October 29, 2016

சர்வதேச திரைப்பட விழாவுக்கு இறுதிச்சுற்று தேர்வு


சர்வதேச திரைப்பட விழாவுக்கு இறுதிச்சுற்று தேர்வு



29 அக்,2016 - 17:08 IST






எழுத்தின் அளவு:








இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கோவாவில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாதான் மிகப்பெரியது. இந்த ஆண்டு 47வது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் 20ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும் இந்த விழாவில் திரையிட 28 இந்திய திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று படம் தேர்வாகியிருக்கிறது. இதில் மாதவன், ரித்திகாசிங் நடித்திருந்தனர். எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் இரு கோச்சர் மூலம் எப்படி குத்துச் சண்டை போட்டியில் உயர்ந்த இடத்துக்கு வருகிறாள் என்கிற கதை. இதில் நிஜ குத்துச்சண்டை வீராங்கணையான ரித்திகாசிங்கே நடித்திருந்தார். தற்போது அவர் தமிழில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதேபோன்று தெலுங்கு படமான பாகுபலி, ருபந்திரம், மலையாள படங்களான வீரம் மெக்பத், காடு போக்குன்ன நேரம் ஆகியவையும், யூ டேர்ன், ஹரிகத பிரசன்னா, ஆலம்மா என்ற கன்னட படங்களும் தேர்வாகி இருக்கிறது.


0 comments:

Post a Comment