அஜித் ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சிறுத்தை சிவா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோரும் நடித்து வருகிறார். வெளிநாட்டில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இங்கு தற்போது படத்தின் முக்கியமான காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். தற்போது ஐதராபாத்தில் படம்பிடிக்கப்படும் காட்சிகள் அனைத்தும் கதைப்படி ஐரோப்பாவில் நடக்கும்படி இருக்குமாம். ஆகையால், ஐதராபாத்திலேயே ஐரோப்பா போன்று செட் அமைத்தும், கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் உருவாக்கி வருகிறார்களாம்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
0 comments:
Post a Comment