விக்னேஷ்சிவன் இயக்கிய ‘நானும் ரெளடிதான்’ படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்தனர்.
தனுஷ் தயாரித்து இருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் மீண்டும் இந்த ஜோடி இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
‘டிமாண்டி காலனி’ படத்தை தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்து வருகின்றனர்.
இதில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை, வசனத்தை எழுதுகிறார்.
கேமியோ பிலிம்ஸ் இண்டியா இப்படத்தை தயாரித்து வருகிறது.
0 comments:
Post a Comment