வசூல் விவரம்: வெள்ளை அறிக்கை வெளியிட முடிவு
26 அக்,2016 - 22:53 IST
தமிழ் சினிமாவில் படங்களுக்கு பூஜை போடுவது துவங்கி, ஹீரோ, ஹீரோயின்கள் கால்சீட், படப்பிடிப்பு செலவு, என படத்தை எடுப்பதற்குள் தயாரிப்பாளர்கள் தலை சுற்றி போகிறார்கள்,
எப்படியோ போராடி ஒரு படத்தை எடுத்து முடித்தால் ரிலீஸ் செய்வதில் வருகிறது அடுத்த சிக்கல், சரியான விநியோகஸ்தரகள், நல்ல தியேட்டர்கள் கிடைத்து படத்தை மக்களிடன் கொண்டு சேர்பதற்குள் ஒரு யுகத்தையே கடக்கின்றனர் தயாரிப்பாளர்கள் இவ்வளவு போராட்டங்களையும் தாண்டி தமிழ் சினிமாவில் ஒரு சில தயாரிப்பாளர்களே தொடர்ந்து படம் தயாரித்து வருகின்றனர்.
பலர் ஒரிரு படங்கள் மட்டுமே தயாரித்து விட்டு அட்ரஸ் இல்லாமல் போகின்றனர். பெப்சி தொழிலாளர்களின் சம்பளம், ஹிரோக்களின் சம்பளத்தின் இமாலய ஏற்றம் ஒருபக்கமும் இணையதளத்தில் ‛உடனடி‛ ரிலீஸ் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தயாரிப்பாளர்களை புரட்டி போடுகிறது .
இந்த பிரச்சனையை சமாளிக்க பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் அதற்கு ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார். அதை தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவும் ஏற்று கொள்கிறார்.
‛‛ தமிழ் சினிமாவில் சமீபமாக வெளியாகும் படங்களள ஓட வைக்க ‛‛வசூல் மழை‛‛, ‛‛பாக்ஸ் ஆபிஸ் ஹிட்‛‛ என தயாரிப்பாளர்கள் செய்யும் விளம்பரத்தால் அதை உண்மை என நம்பி ஒரிரு படங்கள் மட்டுமே நடித்த நடிகர்கள் அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை பட மடங்களாக உயர்த்தி வருகின்றனர். ஆனால் உண்மை நிலை தமிழ் சினமாவில் தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகவே இருந்து வருகிறது.
இதற்கு தீர்வாக இனி ஒவ்வொரு மாதமும் கூடும் பெடரேஷன் மீட்டிங்கில் அந்தந்த மாதம் ரிலீஸ் ஆன படங்களின் வசூல் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், முதலீட்டிலிருந்து எத்தை சதவீதம் வசூல். எத்தனை சதவீதம் லாபம் அல்லது நஷ்டம், என தெரிவிக்க வேண்டும், இதன் மூலம் உண்மை நிலை வெளியுலகிற்கு தெரியவரும்‛‛ என கூறினார்.
திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த கோரிக்கைக்கு பல திரையுலக அமைப்பினர் வரவேற்பு அளித்துள்ளனர். அவ்வாறு நடந்தால் நிறைய சிறிய தயாரிப்பாளர்கள் தாங்கள் இழந்த பணத்தை மீட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இவ்வாறு நடந்தால் வருமான வரிகளை தவிர்க்க சில் ஹிரோக்கள் மறைக்கும் சம்பளம், சில பெரிய தயாரிப்பாளர்கள் மறைக்கும் லாபம், உள்ளிட்ட பல விஷயங்கள் வெளியுலகிற்கு வர வாய்புள்ளதால் இந்த விஷயம் நடைமுறைக்கு வருமா என்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
0 comments:
Post a Comment