திருமணமானவர்களுக்கு முதல் தீபாவளி எப்படி தலை தீபாவளியோ, அதுபோல் தீபாவளி அன்று தங்கள் படங்கள் வெளியானால் அதுதான் நடிகர்களுக்கு தலை தீபாவளி.
தற்போது முதன்முறையாக ஷாம், இந்த தலை தீபாவளியை கொண்டாடும் மகிழ்ச்சியில் உள்ளார்.
அவர் கன்னடத்தில் நடித்துள்ள ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ நாளை தீபாவளி விருந்தாக ரிலீஸ் ஆகிறது.
இப்படம் குறித்து ஷாம் கூறியதாவது….
“கன்னடத்தில் இது எனக்கு மூன்றாவது படம். இதை இயக்கியிருப்பவர் மகேஷ் ராவ். ஒளிப்பதிவு ஆண்ட்ரூ. கே. மஞ்சு என்பர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
நான் இதுவரை நடித்ததில் மோஸ்ட் பவர்புல் ரோல் இந்த படத்தில் அமைந்துள்ளது.
இதில் நான் கேங்ஸ்டராக வருகிறேன்.. தேவ் எனது கேரக்டர் பெயர்.
எனக்கு ஒரு தனியாக தீம் சாங் உண்டு. நான் வரும் போதெல்லாம் அது ஒலிக்கும்.
‘தனி ஒருவன்’ அரவிந்தசாமி மாதிரி இந்தப் படம் வந்ததும் நான் பேசப்படுவேன்.
இதுவரை நான் சேர்ந்து நடித்தவர்களில் யஷ் சிறந்த கோ ஆர்ட்டிஸ்ட் என்பேன்.
பொதுவாக நடிப்பவர்கள் தன் பாத்திரம், தோற்றம், ஸ்டைல்,உடைகள், வசனங்கள், நடிப்பு போன்றவை தங்களுக்கு மட்டும் நன்றாக சிறப்பாக வர வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்; நினைப்பார்கள்.
ஆனால் யஷ் மாறுபட்டவர். அவருக்கு படத்தில் எப்படி முக்கியத்துவம் கொடுத்தாரோ அதே போல எனக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.
தன் நாயகன் பாத்திரம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் எதிராளியான வில்லன் பாத்திரமும் நன்றாக வர வேண்டும் என விரும்பினார்.
உங்களிடமுள்ள பெஸ்ட்டைக் கொண்டு வாருங்கள் என்று என்னை நன்றாக ஊக்கப்படுத்தினார். நடிப்பதற்கு எனக்கான இடத்தை விரிவாக்கிக் களம் அமைத்துக் கொடுத்தார்.
அது மட்டுமல்ல என் உடைகளை வடிவமைத்ததே அவர் தான். என் சூட் இப்படி இருக்க வேண்டும்., ஜாக்கெட் இப்படி ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று வடிவமைத்துக் கொடுத்தார்.
எனக்கு வேறு மொழிகளில் வந்த “கிக்’, ‘ரேஸ் குர்ரம்’ போன்ற படங்கள் எல்லாமே என் , ‘6’ படம் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கின்றன. இந்தப்படமும் அப்படித்தான் வந்தது.
என்ற ஷாம் தமிழில் ‘காவியன்’ என்கிற படத்தில் நடித்து வருவதாகவும் தெலுங்கில் சுரேந்தர் ரெட்டியின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
விடைபெறும் முன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் கூறினார்.
0 comments:
Post a Comment