Thursday, October 27, 2016

இசை அமைப்பாளரின் வெற்றியில் இயக்குனருக்கும் பங்கு இருக்கிறது: அரோல் கரோலி


இசை அமைப்பாளரின் வெற்றியில் இயக்குனருக்கும் பங்கு இருக்கிறது: அரோல் கரோலி



27 அக்,2016 - 10:56 IST






எழுத்தின் அளவு:








பிசாசு படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் அரோல் கரோலி. தற்போது சவரக்கத்தி படத்திற்கு இசை அமைத்துள்ளார். பிசாசு படத்தில் ஒரே பாடல்தான். அதேபோல சவரக்கத்தி படத்திலும் ஒரே பாடல்தான். ஆனால் இரண்டு படங்களும் பின்னணி இசைக்கு முக்கியத்துவமான படங்கள். இதுபற்றி அரோல் கரோலி கூறியதாவது...

சவரக்கத்தி படத்திற்காக இரண்டு பாடல்களை நான் இசையமைத்து இருக்கிறேன். ஒன்று, "தங்கக்கத்தி, இரும்புக்கத்தி...", மற்றொன்று தமிழச்சி தங்கப்பாண்டியனின் வரிகளில் உதயமான "அன்னாந்து பார்...." பாடல். இதில் இரண்டாவது பாடலுக்கு மிக முக்கியமே, காட்சிகள் தான். எனவே நாங்கள் அந்த பாடலை இசை வெளியீட்டு விழாவில் வெளியிடவில்லை. நிச்சயமாக யதார்த்தமான காட்சிகளில் உருவான இந்த "அன்னாந்து பார்...." பாடலை திரைப்படத்தில் பார்க்கும் பொழுது, ஒரு புதுவித அனுபவம் ரசிகர்களின் உள்ளங்களில் ஏற்படும்.

மிஷ்கின் படங்கள் அனைத்தும், பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதியக்கூடியதாக இருக்கும். அவரின் ரசனையை நன்கு அறிந்து, அதற்கேற்றார் போல் இசையமைப்பது தான் சவாலான காரியம். ஒரு இசை அமைப்பாளரின் வெற்றிக்கு இயக்குனர்கள் மிகவும் முக்கியம். மிஷ்கின் படங்களின் பாடல்களின் வெற்றிக்கு அதுதான் காரணம். என்கிறார் அரோல் கரோலி.


0 comments:

Post a Comment