Friday, October 28, 2016

'பைரவா' டீசர், ஒரே நாளில் 3 மில்லியன் பார்வை


'பைரவா' டீசர், ஒரே நாளில் 3 மில்லியன் பார்வை



29 அக்,2016 - 10:21 IST






எழுத்தின் அளவு:








விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் 'பைரவா' படத்தின் டீசர் நேற்று இரவு 9.30 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான சில நிமிடங்களுக்குள்ளே டீசரைப் பலரும் பார்த்ததால் அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை பரபரவென ஏறியது. காலையிலேயே 1 லட்சம் லைக்குகளைப் பெற்றது. ஆனாலும், யு டியூப் டீசரைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையை காலையில் 'அப்டேட்' செய்யாமல் வைத்திருந்தது. நண்பகலுக்குத்தான் அதன் பார்வை எண்ணிக்கைகள் அப்டேட் ஆனது. வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே டீசர் 20 லட்சம் பார்வைகளைப் பெற்று சாதனையைப் படைத்துள்ளது.

யு டியூபைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் டீசரோ, டிரைலரோ வெளியாகும் போது அவை பல சாதனைகளைப் படைத்து வருகின்றன. அந்த விதத்தில் விஜய் நடித்துள்ள 'பைரவா' டீசரும் அடுத்த சாதனையைப் புரிந்துள்ளது. இதுவரை 37 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள டீசருக்கு 1 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.

விஜய்யை அவருடைய ரசிகர்கள் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் ரசிக்க விரும்புகிறார்களோ அதற்கேற்றபடி அதிரடியான ஒரு பரபர ஆக்ஷ்ன் டீசராக 'பைரவா' டீசர் அமைந்துள்ளது. 24 மணி நேரத்திற்குள் டீசர் புரிந்த சாதனை அடுத்த சில நாட்களுக்குள் மேலும் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment