ரம்பாவுக்கு வந்த அதே பிரச்சனையில் நஸ்ரியா, ரேஷ்மி,கனிகா
Published 1 min ago by CF Team Time last modified: October 27, 2016 at 12:24 pm [IST]
நடிகைகள் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும் அவர்கள் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக அவ்வப்போது வதந்தி பரவுகிறது.
advertisement
நடிகை ரம்பா தனது கணவர் இந்திரன் பத்மநாதன், 2 மகள்களுடன் கனடாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் கணவரை பிரிந்து வாழ்வதாகவும், அவருடன் சேர்த்து வைக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகியதாகவும் செய்திகள் வெளியாகின.
ரம்பா போன்று பல நடிகைகளின் திருமண வாழ்க்கை குறித்து வதந்திகள் பரவியுள்ளது.
ரம்பா
எனக்கும் என் கணவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என நடிகை ரம்பா தெரிவித்துள்ளார். ரம்பாவின் கணவர் அவருக்காக புது பங்களா கட்டியுள்ளாராம்.
ரேஷ்மி மேனன்
நடிகர் பாபி சிம்ஹாவும், நடிகை ரேஷ்மி மேனனும் விவாகரத்து பெறப் போவதாக செய்திகள் வெளியாகின. இதை பார்த்த பாபி தானும், தனது மனைவியும் பிரியவில்லை என்று விளக்கம் அளித்தார்.
கனிகா
நடிகை கனிகா தனது கணவர் ஷ்யாமுடன் சென்னையில் வசித்து வரும் நிலையில் அவர் விவாகரத்து பெறுவதாக கூறப்பட்டது. இது குறித்து அறிந்த கனிகா, நான் என் கணவர் மற்றும் மகனுடன் சந்தோஷமாக உள்ளேன் என்றார்.
நஸ்ரியா
நஸ்ரியாவும் மலையாள நடிகர் பஹத் பாசிலும் திருமணமான ஓராண்டுக்குள் பிரிந்துவிட்டதாக வதந்தி பரவியது. நஸ்ரியா படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு கணவரை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
ரீமா கல்லிங்கல்
English summary : Actresses Rambha, Kanika, Nazriya, Reshmi Menon, Mohini, Reema Kallinagal are victims of divorce rumours.
0 comments:
Post a Comment