Thursday, October 27, 2016

“டோனி ஜாவுக்கு அடுத்து மோகன்லால் தான்” ; மிரண்ட பீட்டர் ஹெய்ன்..!


“டோனி ஜாவுக்கு அடுத்து மோகன்லால் தான்” ; மிரண்ட பீட்டர் ஹெய்ன்..!



27 அக்,2016 - 15:29 IST






எழுத்தின் அளவு:








'புலி முருகன்' படத்தில் சிறப்பம்சமாக பேசப்படுவது மோகன்லாலின் உக்கிரமான சண்டைக்காட்சிகள் தான். எந்திரன்', 'பாகுபலி' என மெகா பட்ஜெட் படங்களுக்கு வேலைபார்க்கும் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரை 'புலி முருகன்' படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக ஒப்பந்தம் செய்தபோதே மற்ற படங்களைப்போல இல்லாமல் பெண்டு நிமிர்த்தும் ஆக்சன் காட்சிகள் இதில் அதிகம் இருக்கும் என்பதை மலையாள திரையுலகினர் அறிந்து ஆச்சர்யம் அடைந்தனர். ஆனால் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒகே சொன்ன மோகன்லால் இந்தப்படத்தின் சண்டைப்பயிற்சிகளுக்காக வியட்நாம் சென்று பயிற்சி எடுத்து வந்தார்..

இந்தப்படத்தின் மிக முக்கியமான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கிய பீட்டர் ஹெய்ன், அதில் மோகன்லாலின் வேகம் கண்டு மிரண்டு போனாராம். சண்டைக்காட்சியில் மிக முக்கியமான ஷாட் ஒன்றில் இந்த வயதில் மோகன்லால் எப்படி பண்ணுவாரோ என்கிற சந்தேகத்துடன் தான் சண்டைக்காட்சியை கம்போஸ் பண்ணினாராம் பீட்டர் மாஸ்டர். காரணம் அந்தவிதமான ஷாட்டை இதற்குமுன் ஆக்சன் நடிகரான டோனி ஜா மட்டுமே சிறப்பாக பண்ணியுள்ளார்.

இந்தியாவில் அந்தவிதமான ஸ்டண்ட் மூவை இங்குள்ள இளம் நடிகர்களை விட்டுவிட்டு மோகன்லாலுக்கு பயன்படுத்த பீட்டர் ஹெய்ன் நினைத்ததற்கு காரணம் மோகன்லாலின் உடலின் ரப்பர் போல வளைந்துகொடுக்கும் தன்மை தான். பீட்டர் ஹெய்ன் எதிர்பார்த்ததுபோலவே டூப் போடாமல், ரோப் கட்டாமல் அந்த சண்டைக்காட்சியின் முக்கியமான மூவ்மென்ட்டை மோகன்லால் பிசிறின்றி செய்து முடித்தாராம். படத்தை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் அந்த காட்சிக்கு விசிலடிக்காமல் இருக்கமுடியாது.


0 comments:

Post a Comment