Wednesday, October 26, 2016

தமிழ், தெலுங்கில் வெளிவரும் முன்னோடி


தமிழ், தெலுங்கில் வெளிவரும் முன்னோடி



26 அக்,2016 - 14:01 IST






எழுத்தின் அளவு:








புதுமுக இயக்குனர் எஸ்.பி.டி.ஏ.குமார் இயக்கி உள்ள படம் முன்னோடி. எஸ்.பி.டி.ராஜசேகர், சோஹம் அகர்வால் இணைந்து தயாரிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் ஹரீஷ், நடிகை யாமினி பாஸ்கர் ஹீரோ, ஹீரோயின். கங்காரு அர்ஜுன், குற்றம் கடிதல் பாவல் நவநீதன் வில்லன். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்கிறார், கே.பிரபு சங்கர் இசை அமைக்கிறார். படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் தயாராகிறது. ரோல் மாடல் என்பது தெலுங்கு டைட்டில்.

படம் பற்றி இயக்குனர் எஸ்.பி.டி.ஏ.குமார் கூறியதாவது: தாய் பாசத்துக்கு ஏங்கும் ஒருவன் ஒரு தாதாவை முன்னோடியாக கொண்டு அடிதடி செய்கிறான். பின்னர் மனம் மாறி போலீசை முன்னோடியாக கொண்டு போலீஸ் இன்பார்மர் ஆகிறான். இதனால் தாதாவுக்கும், அவனுக்கும் மோதல் வருகிறது. உண்மையில் அவன் வாழ்வில் யார் முன்னோடி என்பதுதான் கதை. படத்தில் நான்கு பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு. ஒரு பாடல் முழுக்க முழுக்க கிராபிக்சில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரை 95 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. படப்பிடிப்பு முன் நன்கு எங்களை தயார் செய்து கொண்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளோம் என்கிறார் குமார்.


0 comments:

Post a Comment