‛சிவாய்' படத்தின் ஆரம்ப காட்சியை வெளியிட்ட கமல் ஆர் கான் மீது நடவடிக்கை
28 அக்,2016 - 11:34 IST
பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான கமல் ஆர் கான், எதையாவது பேசி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி கொள்வார். சுருக்கமாக சொல்லப்போனால் தென்னிந்திய பிரபலம் ராம்கோபால் வர்மா போன்றவர். இவர் போட்ட டுவிட்டர் பதிவு ஒன்று அவருக்கே பிரச்னையாகியுள்ளது. அஜய் தேவ்கன் நடித்துள்ள சிவாய் படம் இன்று உலகம் முழுக்க ரிலீஸாகியுள்ள நிலையில், இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ துபாயில் வெளியானது. அதில் பங்கேற்ற கமல் ஆர் கான், படத்தை பார்த்ததோடு மட்டுமல்லாமல், படத்தின் சில நிமிடங்கள் ஓடும் ஆரம்பகாட்சியையும் தனது செல்போனில் படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டு விட்டார். ஆனால் சற்று நேரத்திலேயே அதை தன் டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.
இது இப்போது பிரச்னையாகியுள்ளது. ஏற்கனவே திரைத்துறையினர் தான் இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகிவிடுகிறது என்று வேதனை தெரிவித்து வரும் வேளையில் திரைத்துறையை சார்ந்த ஒருவரே இப்படி செய்திருப்பது சிவாய் படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதோடு, கமல் ஆர் கான் மீது நடவடிக்கை எடுக்கவும் சிவாய் படக்குழு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிவாய் படத்தை வெளியிட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது... ‛‛திருட்டுத்தனமாக படத்தின் ஆரம்பகாட்சியை வெளியிட்ட கமல் ஆர் கான் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதுகுறித்து அவர் மீது மும்பையில் உள்ள சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment