தமன்னாவின் தீபாவளி வேண்டுகோள்...!
27 அக்,2016 - 15:38 IST
தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டின் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நடிகை தமன்னா. தற்போது விஷால் உடன் கத்தி சண்டை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தாண்டு தீபாவளியை தன் குடும்பத்தாருடன் கொண்டாடப்போவதாக தமன்னா கூறியுள்ளார்.
இதுப்பற்றி தமன்னா கூறியிருப்பதாவது... ‛‛இந்த தீபாவளியை என் குடும்பத்தோடு கொண்டாடப்போகிறேன். ஒவ்வொரு ஆண்டும் போல இந்தாண்டும் காலையில் மகாலட்சுமி கோவிலுக்கு சென்று குடும்பத்தோடு வழிபடுவோம். அதைமுடித்துவிட்டு பட்டாசு எல்லாம் வெடிக்க தொடங்குவேன். ஆனால், ஒருக்கட்டத்தில் பட்டாசு வெடிப்பதை நிறுத்திவிட்டேன். பட்டாசு தயாரிப்பதில் குழந்தைகள் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள், அதேப்போல் பட்டாசால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது போன்ற விஷயங்களை எல்லாம் தெரிந்ததும் வெடி போடுவதை நிறுத்திவிட்டேன். இந்த தீபாவளியில் உங்களிடம் நான் வேண்டுவதெல்லாம், முடிந்தவரை பட்டாசு வெடிப்பதை தவிருங்கள். தீபாவளி எல்லோருக்கும் கலர்புல்லாகவும், அன்பை பகிரும் விதமாகவும் இருக்கட்டும். கூடவே தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுங்கள், அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்'' என்றார்.
0 comments:
Post a Comment