ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கபாலி’ படத்தில் புகழ்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதி, பாடியவர் அருண்ராஜா காமராஜ். இவர் பாடகர், பாடலாசிரியர் மட்டுமில்லாமல் நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்ட அருண்ராஜா காமராஜ் ராஜா ராணி, மான் கராத்தே, பென்சில் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், முதன்முறையாக ‘மரகத நாணயம்’ படத்தின் மூலம் முழுநேர கதாநாயகனாக மாறியுள்ளார். இந்த படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிப்பது குறித்து அருண்ராஜா காமராஜ் கூறும்போது,
இப்படத்தில் நான் முதன்முறையாக வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் நரை முடியோடு நடித்திருக்கிறேன். மரகத நாணயம் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும். இப்படத்தில் ஒலி மற்றும் குரல்தான் தனித்துவமான சிறப்பம்சம்.
ஆகையால், குரல் மாற்றி பேசும் என்னுடைய திறமைதான் இப்படத்தில் நான் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மரகத நாணயம் என்னுடைய திரை வாழ்வில் அதிர்ஷ்ட கல்லாக விளங்கும் என்று முழுமையாக நம்புகிறேன் என்றார்.
0 comments:
Post a Comment