வெற்றிக்காக மெனக்கெடும் தனுஷ்!
27 அக்,2016 - 06:59 IST
தொடர்ச்சியாக, மூன்று படங்கள் சொதப்பியதால், தன் தீபாவளி ரிலீசான கொடியை, வெற்றிக் கொடி கட்ட வைக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார் தனுஷ். இதற்காக, என்னென்ன செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்ய துவங்கியுள்ளார். பாலிவுட்டில், படம் வெளியாவதற்கு முன், அந்த படங்களில் நடித்தவர்கள், ஒவ்வொரு முக்கிய நகரத்துக்கும் சென்று, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். கொடி படத்துக்கும் அதே பாணியை பின்பற்றும் தனுஷ், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், சக நடிகர் பட்டாளத்துடன் களமிறங்கி உள்ளார். முதன்முறையாக, இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஒரு தனுஷுக்கு ஜோடி த்ரிஷா; மற்றொரு தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளவர், பிரேமம் புகழ் அனுபமா.
Advertisement
0 comments:
Post a Comment