அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
30 மார்,2017 - 00:00 IST
குக்கூ பட நாயகி மாள்விகா நாயர், அந்த படத்துக்கு பின், மீண்டும், அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தின் மூலம், கோலிவுட்டில் கால் பதித்துள்ளார். 'குக்கூ படத்துக்கு பின், எங்கே போனீர்கள்' என, கேட்டால், 'தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்தேன். கல்லுாரியில் ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். இதனால், தமிழில் நடிக்க முடியவில்லை. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தின் கதை நன்றாக இருந்ததால், மீண்டும் நடிக்க வந்துள்ளேன்' என்கிறார். அதிக படங்களில் நடித்து, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம், அவருக்கு இல்லையாம். சில படங்களில் நடித்தாலும், உருப்படியான படங்களில் மட்டுமே நடிப்பது என்ற உறுதியுடன் இருக்கிறார்.
Advertisement
0 comments:
Post a Comment