ரசிகர்களை சந்திக்கவில்லை - ரஜினி தரப்பு மறுப்பு
29 மார்,2017 - 14:59 IST
நடிகர் ரஜினிகாந்த், ஏப்ரல் 2-ம் தேதி தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக வந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். சமீபகாலமாக ரஜினியின் நடவடிக்கைகளில் நிறையவே மாற்றம் தெரிகிறது. இந்நிலையில், வருகிற 2ந் தேதி ரஜினி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் பயணத்திற்காக தான் ரஜினி, ரசிகர்களை அழைத்துள்ளார் என்று பேசப்பட்டு வருகிறது. அதேசமயம், லதா ரஜினிகாந்த் சமூக சேவை தொடர்பாக ஒரு அமைப்பை தொடங்க உள்ளாராம். இதற்காக தான் ரசிகர்களை அழைத்து பேசப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி ரஜினியை சுற்றி பல செய்திகள் சிரகடித்து பறந்து கொண்டிருக்கும் வேளையில் ரஜினி தரப்பு இதை மறுத்துள்ளது. ரஜினியின் செய்தி தொடர்பாளர் ரியாஸ், ‛‛ஏப்ரல் 2-ம் தேதி ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யான தகவல் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment