Thursday, March 30, 2017

எதற்கும் அசராத ராம் கோபால் வர்மா


எதற்கும் அசராத ராம் கோபால் வர்மா



30 மார்,2017 - 11:05 IST






எழுத்தின் அளவு:








சர்ச்சையே உன் பெயர்தான் ராம்கோபால்வர்மாவா என்று சொல்லும் அளவுக்கு தனது டுவிட்டரில் அவ்வப்போது சர்ச்சை செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் டைரக்டர் ராம்கோபால் வர்மா. அந்தவகையில், அமிதாப் பச்சன், ரஜினி உள்பட பல பிரபலங்களை அவர் கலாய்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் பவர்கல்யாண் மற்றும் அவரது கட்டமராயுடு படத்தை பற்றி அவர் அடித்த கமெண்ட், பவன் ரசிகர்களை கொந்தளிக்க செய்துவிட்டது.

இந்தநிலையில், ராம்கோபால்வர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் மீம்ஸ்கள் வெளியிட்டு வருவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில், தற்போது ராம்கோபால்வர்மா இறந்து விட்டதாகவும், இறுதி ஊர்வலம் நடந்ததாகவும் ஒரு மீம்ஸை உருவாக்கியுள்ளனர். ஆனால் அதைப்பார்த்து அவர் துளியும் கலங்கவில்லை. எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக, தனது டுவிட்டரிலேயே அந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment