ஷாரூக்கானுடன் மோதும் அக்ஷ்ய் குமார்
28 மார்,2017 - 15:25 IST
பாலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஷாரூக்கான் மற்றும் அக்ஷ்ய் குமார் முக்கியமானவர்கள். இருவரும் அவரவரது படங்களல் பிஸியாக நடித்து வருகிறார்கள். அக்ஷ்ய், தற்போது இயக்குநர் ஸ்ரீ நாராயண் சிங் இயக்கத்தில் ‛டாய்லெட் ஏக் பிரேம் கதா' படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக ஜூன் 2ம் தேதி டாய்லெட் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு படம் தள்ளிபோய் உள்ளது. ஷூட்டிங் பணிகள் திட்டமிட்ட காலத்தில் முடியாததல் ரிலீஸ் தேதி தள்ளிபோய் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அன்றைய தினம் தான் இம்தியாஸ் அலி இயக்கத்தில், ஷாரூக்கான்-அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகி வரும் படமும் ரிலீஸாகிறது. இதனால், இரண்டு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸில் மோதல் உருவாகியுள்ளது. இந்த இருபடங்களில் எந்த படம் வசூலை குவிக்க போகிறது, இல்லை ஏதேனும் ஒரு படம் பின் வாங்குகிறதா...? என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment