தினகரனுக்கு ஆதரவாக எமி ஜாக்சன் பிரச்சாரம் சாத்தியமா...?
30 மார்,2017 - 17:09 IST
ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சசிகலா அணி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில், தனக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரங்களை களமிறக்க முடிவு செய்து சிலரை அணுகியுள்ளார். பலரும் பல்வேறு காரணங்களை சொல்லி நழுவிவிட்டனர்.
இந்நிலையில் மதராசபட்டணம் மூலம் அறிமுகமான நடிகை எமி ஜாக்சனை அவரது மானேஜர் மூலம் அணுகியுள்ளனர். இதற்காக எமிக்கு பெரும் தொகை தருவதாக சொல்லப்பட்டதை அடுத்து டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய எமி தரப்பில் சம்மதம் சொல்லப்பட்டதாக தகவல் அடிபடுகிறது.
மதராசபட்டணம் படத்தில் ஆங்கிலேய பெண்ணாக, தொப்பி அணிந்து நடித்திருந்தார் எமி. அதை கருத்தில் கொண்டு எமி ஜாக்சனை பிரசாரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளோம் என தினகரன் தரப்பு கூறுகிறதாம். ஆனால் எமி தரப்பில் இது குறித்து கேட்டால், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்கின்றனர்.
ஒருவேளை எமி சம்மதம் சொன்னாலும் அவருக்கு தமிழே தெரியாது. அப்படியிருக்கையில் அவர் செய்யும் ஆங்கில பிரசாரம் மக்களிடம் எடுபடுமா..? என்பது கேள்வி. எது எப்படியோ உண்மை என்ன என்று சில நாட்களில் தெரியப்போகிறது.
0 comments:
Post a Comment