Friday, March 31, 2017

நெடும்பா படத்தை திரையிட முடியாமல் தவிக்கும் ராஜ்குமார்


நெடும்பா படத்தை திரையிட முடியாமல் தவிக்கும் ராஜ்குமார்



01 ஏப்,2017 - 10:09 IST






எழுத்தின் அளவு:








வெங்காயம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் சங்ககிரி ராஜ்குமார். அதன்பிறகு ஒண் என்ற படத்தை அவரே தயாரித்து, அவர் மட்டுமே நடித்தார். கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட இந்தப் படமும் வெளிவரவில்லை. இந்த நிலையில் அவர் நெடும்பா என்ற படத்தை இயக்கி உள்ளார். இது மலைவாழ் மக்களின் கதை. இந்தப் படமும் வெளிவரவில்லை. இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

நெடும்பா திரைப்படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது, முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ஒரு படத்தை அவ்வளவு எளிதாக திரையிட்டு விட முடியாது, அப்படி வெளியிட்டாலும் எந்த பயனும் இருக்காது. இந்நிலையில் படம் பார்த்த சேரன் வெங்காயம் திரைப்படத்தை விட பல மடங்கு சிறந்த படம் என சிலாகித்து இதை நானே வெளியிடுகிறேன் என சொல்லி ஒப்பபந்தம் செய்திருந்த நிலையில், சில சிக்கல்களால் ஒன்னறை ஆண்டுகள் கடந்து விட்டது.

அதன் பிறகு வேறு நிறுவனம் மூலமாக வெளியிடலாம் என அவர் முயற்சித்தபோது உயர்மதிப்பு நோட்டு பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளால் தொடர்ச்சியாக தள்ளி போய்கொண்டே இருந்தது. அதற்காக காத்திருந்த நாட்களை ஒன் படத்திற்காக செலவிட்டு சரி செய்து கொண்டிருந்தேன். நெடும்பா படத்திற்கான உழைப்பு மிகக்கடுமையானது, 500 ஆண்டுகளாக வெளியுலக மக்களை பார்க்காத ஒரு இனம் பற்றிய கதை. தென்னிந்தியாவிலுள்ள பெரும்பாலான மலை கிராமங்களுக்கு பயணித்து, ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை கேட்டு எழுதப்பட்ட கதை திரைக்கதை. கிட்டத்தட்ட 300 பேரின் கடின உழைப்பு.

இந்த தாமதத்திற்க்கான முழு காரணம் நான் தான், ஒரு தயாரிப்பாளராக இருப்பதற்கு எந்தவித தகுதியும் இல்லாத நான் இதை தயாரித்திருக்க கூடாது. கருத்து, கதையமைப்பு, காட்சியமைப்பு என சிந்தித்து கொண்டிருந்த என்னை கடன், வட்டி, தவணை என சிந்திக்க வைத்து சிதைத்துக்கொண்டிருக்கிறது இந்தப்படம். இது நான் தயாரிக்கும் கடைசி படம் என எண்ணும்போது ஒரு விரக்தி ஏற்படுகிறது.

சமீபத்தில் இதே களம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களின் (கடம்பன், வனமகன்) ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட், பெரிய விளம்பரம் செய்யபடும் அந்த படங்கள் இரண்டு வருடமாக போராடிக்கொண்டிருக்கும் நெடும்பாவிற்கு முன்னதாகக்கூட வெளியிடப்பட வாய்ப்பிருக்கிறது. அதற்கு பிறகு நெடும்பா வருமேயானால் “இதே மாதிரி ஏற்கெனவே ரெண்டு படம் வந்திருச்சு” என்றோ அல்லது “அந்த படத்த பாத்து காப்பி அடிச்சுருக்கான்” என்றோ நீங்கள் கமெண்ட் அடித்து விட்டு போகும் தருவாயில், நான் ஊர் பக்கம் ஏதேனும் ஒரு காட்டு வேலை செய்து கொண்டிருப்பேன். என்கிறார் ராஜ்குமார்.


0 comments:

Post a Comment