கேரளாவில் ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்த மம்மூட்டி!
01 ஏப்,2017 - 09:14 IST
மம்மூட்டி நடிப்பில் நேற்று முன்தினம் திரைக்கு வந்துள்ள படம் தி கிரேட் பாதர். இந்த படத்தில் மம்மூட்டியுடன் ஆர்யா, சினேகா, மியா ஜார்ஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். நடிகர்கள் பிருதிவிராஜ், ஆர்யா மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை ஹனீப் ஆடென் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள்.
அதன்காரணமாக கேரளாவில் முதல்நாள் 4.31 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது தி கிரேட் பாதர். இது கேரள பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை என்பதோடு, ரஜினி நடித்த கபாலி படத்தின் முதல்நாள் கேரளா வசூலை விட அதிகம் என்கிறார்கள். அதாவது கபாலி படம் 4.27 கோடி வசூலித்ததாம். அந்த வகையில், கேரளாவில் முதல்நாள் வசூலில் இதுவரை கபாலிதான் முதலிடத்தில் இருந்து வந்தது. அந்த இடத்தை தற்போது மம்மூட்டி படம் பிடித் துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக மலையாளத்தில் மோகன்லால் நடித்த படங்களே சூப்பர் ஹிட்டாகி வந்த நிலையில், தற்போது மம்மூட்டியின் இந்த படமும் வசூலில் நல்லதொரு ஓப்பனிங்கை கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.
0 comments:
Post a Comment