புதிய இயக்குனர் ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள படம் ‘தப்புதண்டா’. சத்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஸ்வேதா கய். ‘இது என்ன மாயம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தில் கதாநாயகி ஆகி இருக்கிறார். இது பற்றி கூறிய அவர்…
“என் பெயர் ஸ்வேதா கய் என்று இருப்பதால் நான் வட இந்திய பெண் என்று நினைக்கிறார்கள். நான் தமிழ் பெண். எனது பெயருக்குப்பின்னால், எனது அம்மா காயத்திரியின் முதல் இரண்டு எழுத்தை சேர்த்து ஸ்வேதா கய் என்று வைத்து இருக்கிறேன்.
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு எளிதாக கிடைத்து விடவில்லை. இந்த படத்தின் நாயகி தேர்வுக்கு 60 பெண்கள் வந்து இருந்தனர். பல கோணங்களில் நடித்துக்காட்ட சொன்னார்கள். நீண்ட வசனத்தை கொடுத்து பேச சொன்னார்கள். இதில், எல்லாம் ‘ஓகே’ ஆனபிறகு, நான் ஒல்லியாக இருப்பதாக சொன்னார்கள். இதனால் நான் செலக்ட் ஆவேனா என்று பயந்து கொண்டே இருந்தேன்.
பெரிய போராட்டத்தை சந்தித்த பிறகுதான் இதில் நடிக்க தேர்வு ஆனேன். அப்படி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இதில் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறேன். நிச்சயம் இந்த படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்” என்றார்.
0 comments:
Post a Comment