குழந்தைகள் பிறப்பதென்பது கடவுளின் வரம் என்பார்கள். ஒரு குழந்தைக்கே கடவுளின் வரம் எனும் போது, ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் எனும்போது அந்த குழந்தைகளே தெய்வக்குழந்தைகள் தானே..
ஸ்ரீனிவாசன், யத்ரி தம்பதிகள் பெற்றெடுத்த அந்த குழந்தைகளுக்கு லக்ஷன், லக்ஷயா, லக்ஷிகா, லக்ஷா என்று பெயர் வைத்தார்கள். லட்சங்கள் இல்லையென்றாலும் பெயரிலாவது இருக்கட்டும் என்று பெயர் வைத்தார்களோ என்னவோ…
நான்கு குழந்தைகளையும் வளர்க்க சிரமப்படுகிற விஷயம் பத்திரிக்கையாளர் அமலன் மூலம் தெரிந்து கொண்ட லாரன்ஸ் அந்த நான்கு குழந்தைகளையும் தத்தெடுத்துக் கொண்டார். 3 வயதுடைய அந்த குழந்தைகளின் வளர்ப்பு, படிப்பு, எதிர்காலம் எல்லாம் இனி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி லாரன்ஸ் தத்தெடுத்துக் கொண்டார்.
ராகவா லாரன்ஸ் ஆதரவற்றோர்களுக்கும், உடல் ஊனமுற்றோர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில்கூட தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக தனியாக அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதை செயல்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment