கடப்பாவில் ரஜினி படம் தொடங்குகிறது
29 ஏப்,2017 - 11:48 IST
ரஜினி நடித்த கபாலி படத்தை இயக்கியவர் பா.ரஞ்சித். அந்த படம் ஹிட்டடித்ததால் மறுபடியும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குமாறு ரஜினியின் மருமகன் தனுஷ் கேட்டுக்கொண்டதை அடுத்து அதற்கான கதை வேலைகளில் பல மாதங்களாக ஈடுபட்டு வந்த டைரக்டர் ரஞ்சித், விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறார். தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு துரிதமாக நடந்து வருகிறது.
மேலும், ரஜினியின் புதிய படமும் கபாலி போலவே கேங்ஸ்டர் கதையில் உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதுகுறித்து டைரக்டர் ரஞ்சித் தரப்பில் விசாரித்தபோது, கபாலி படத்தில் கேங்ஸ்டராக நடித்த ரஜினி புதிய படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதையில் நடிக்கிறார். மீண்டும் வயதான கெட்டப்பில் நடித்தபோதும், கபாலி கதைக்கும் இந்த கதைக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது என்கிறார்கள்.
அதோடு, பாட்ஷா படப்பிடிப்பு நடைபெற்ற மும்பை பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கப்போவதாக பரவிவரும் செய்தியிலும் உண்மையில்லை. இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஆந்திராவிலுள்ள கடப்பா பகுதிகளில்தான் நடைபெறுகிறது. அதற்கான செட் போடும் பணிகள் நடைபெற்றுக்கொண்டி ருக்கிறது என்கிறார்கள்.
0 comments:
Post a Comment